கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை
கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினை எதிர்வரும் 6ஆம் திகதி மனித உரிமை ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய அலுவலகத்தில் ஆஜராகும்படி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 23ஆம் திகதி கிண்ணியாவில் படகு விபத்து சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் கிண்ணியாவில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மூவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனையடுத்து சம்பவம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை காரியாலயத்தில் சுதந்திர ஊடகவியலாளர் அமைப்பினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து ஆணைக்குழுவின் கண்காணிப்பு பிரிவு, ஊடகவியலாளர்கள் கிண்ணியா சம்பவத்தின் போது தாக்கப்பட்டமை தொடர்பில் கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் முழுமையான அறிக்கை கோரியுள்ளது.
அதன் தொடர் நடவடிக்கையாக குறித்த கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ருதியிடம் கேள்வி கேட்கப்போய் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
