நீதி கோரி முன்னெடுக்கப்படவுள்ள கதவடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு
கடந்த வாரம் முத்தையங்கட்டு பகுதியில் கொல்லப்பட்ட இளைஞருக்கு நீதி வேண்டி நாளை மறு தினம் (18.08.2025) கதவடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
கிளிநொச்சி - கரைச்சி பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராசா இன்றைய தினம் மேற்கொண்ட சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு
இதன்போது அவர் கூறுகையில், வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் அனைத்து வர்த்தக நிலையங்கள், பொது அமைப்புக்கள், பொது மக்கள் என அனைவரும் எமது பகுதியில் அநியாயமாக கொல்லப்பட்ட முத்தையங்கட்டு இளைஞனுக்கு நீதிவேண்டி எதிர்வரும் 18.08.2025 அன்று தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் கதவடைப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும், இதற்கு அனைத்து தரப்பினரும் தமது ஆதரவினை வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




