மக்கள் விரோத ஆட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு முல்லைத்தீவு மக்களுக்கு அழைப்பு
ராஜபக்ச கொள்ளைக்கூட்டு ஆட்சியை அகற்றக்கோரி தென்னிலங்கையில் இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கு வலுசேர்க்கும் முகமாக முல்லை மக்கள் அனைவரும் போராட்டத்தில் இணைந்து போராட வேண்டும் என வன்னி மக்கள் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ராஜபக்ச குடும்ப ஆட்சியில் நாடு கொள்ளையிடப்பட்டு அவல நிலைக்குக்கொண்டு வரப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், எரிபொருட்களின் விலையேற்றம், தட்டுப்பாடு, இரசாயன பசளைகளை இல்லாமல் செய்தமை, சீமேந்தின் விலையேற்றம், சமையல் எரிவாயு இன்மை,விலையேற்றம், நாளாந்தம் பொருட்களின் விலையேற்றம், என்பவற்றால் மக்கள் உயிர்வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நிலையிலேயே முல்லை மக்கள் அனைவரும் போராட்டத்தில் இணைந்து போராடவேண்டும் என வன்னிமக்கள் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போராட்டம் இன, மத, கட்சி, பேதமற்று அனைத்து மக்களும் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை 23.04.2022 காலை 9.30 மணிக்கு
முள்ளியவளை கொமார்ஷல் வங்கியிலிருந்து ஆரம்பமாகி நெடுங்கேணி சந்திவரை இடம்பெறவிருக்கும்
அறவழி போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.



