அடுத்த மாதம் முதல் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை வருமாறு அழைப்பு
இலங்கையில் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களையும் அடுத்த மாதம் முதல் பணிக்கு அழைக்க எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் முதல் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் கொண்ட பாடசாலைகளை முதலில் ஆரம்பித்து அதனை சிறிது சிறிதாக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கான திட்டங்களை வகுப்பதற்காக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு கொவிட் தடுப்பூசி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளமையினால் அவர்களை பாடசாலைகளுக்கு அழைப்பதில் ஆபத்து குறைவாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
