யாழ். உடுப்பிட்டியில் கடையடைப்பு - கண்டன போராட்டம்
மக்களின் எதிர்ப்பை மீறி மீளத் திறக்கப்பட்ட மதுபானசாலையை அகற்றுமாறு வலியுறுத்தி இன்று புதன்கிழமை உடுப்பிட்டியில் கடையடைப்பும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இமையாணன் மேற்கு விநாயகர் சனசமூக நிலையத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஒன்றுகூடிய உடுப்பிட்டியை சேர்ந்த 21 சமூகமட்ட அமைப்புகள் இந்தப் போராட்டங்களை நடத்தத் தீர்மானித்துள்ளன.
இந்தத் தீர்மானத்துக்கு உடுப்பிட்டியில் இயங்கும் வர்த்தக நிலையங்கள், கடைகள், தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் சந்தை வியாபாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
குடிமனைகளுக்கு மத்தியில் மதுபான சாலை
இன்று கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுப்பது என்றும் அத்துடன், உடுப்பிட்டி சந்தியில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது எனவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உடுப்பிட்டியில் பாடசாலை மற்றும் மதத் தலங்களுக்கு அண்மையாக குடிமனைகளுக்கு மத்தியில் மதுபான சாலை ஒன்று அண்மையில் திறக்கப்பட்டது.
இந்த மதுபானசாலையை அகற்றுமாறு உடுப்பிட்டி மக்களும் பொது அமைப்புகளும் வலியுறுத்தியிருந்தன.
இதையடுத்து, பூட்டப்பட்ட மதுபானசாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் மீளவும் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டதாக கரவெட்டி பிரதேச செயலர் தெரிவித்திருந்தார்.
சரியான தீர்வு
இதையடுத்து இந்த மதுபானசாலையை அகற்றுமாறு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை உடுப்பிட்டி சமூக மட்ட அமைப்புகள் கடந்த டிசெம்பர் 19ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உடுப்பிட்டி மதுபானசாலை விவகாரம் தொடர்பில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்துக்கு கடந்த டிசெம்பர் 28ஆம் திகதி நடந்த கூட்டத்தில் கஜேந்திரன் எம். பி. கொண்டு வந்திருந்தார்.
எனினும், இதற்கும் சரியான தீர்வு முன்வைக்கப்படவில்லை. இந்த நிலையிலேயே இன்றைய தினம் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
