பௌத்த விகாரை - தேவாலயங்களின் நிலமே பதவிகளில் மாற்றம் கோரும் அசேல சம்பத்
பௌத்த விகாரை மற்றும் தேவாலயங்களின் நிலமே பதவிகளில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டுமென்று தேசிய நுகர்வோர் முன்னணி (ஜே.பி.பி) தலைவர் அசேல சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
பௌத்த விகாரைகளில் தியவடன நிலமே மற்றும் தேவாலயங்களின் பஸ்நாயக்க நிலமே பதவிகள் பெரும்பாலும் உயர்குல குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இதுவரை வரையறுக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம்
இந்நிலையில் அவற்றை சாதாரண பொதுமகனும் வகிக்கும் வகையில் பௌத்த விகாரை மற்றும் தேவாலய சட்டங்கள் திருத்தப்பட வேண்டுமென்று தேசிய நுகர்வோர் முன்னணி (ஜே.பி.பி) தலைவர் அசேல சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
அது தொடர்பில் ஊடகங்களுக்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர்,
புதிய அரசாங்கத்தின் நியமனமானது தலைமுறை தலைமுறையாக இருந்து வந்த அரசியல் பாரம்பரியத்தை உடைத்துள்ளது.
அதே போன்று, பௌத்த விகாரை மற்றும் தேவாலய அமைப்புகளில் பஸ்நாயக்க நிலமே மற்றும் திவடன நிலமே பதவிகள் இனி ஒரே பரம்பரை அல்லது தலைமுறைகளுக்கு மட்டுப்படுத்தப்படக்கூடாது தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் தொழில் வல்லுநர்களுக்கு நாடாளுமன்ற பிரவேசம் பொதுவானதாக இருப்பது போல், இலங்கையின் பௌத்த ஆலய அமைப்பில் தியவடன நிலமே மற்றும் பஸ்நாயக்க நிலமே பதவிகளும் எந்தவொரு குடிமகனுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.
தேவாலயங்களின் வளங்கள் மற்றும் நிதி மேலாண்மை தொடர்பாக ஏராளமான சிக்கல்கள் பதிவாகியுள்ளதால், அவற்றின் வருமானத்தை மதிப்பீடு செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அசேல சம்பத் தொடர்ந்தும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |