இலங்கையில் முதலீடு செய்யுங்கள்! இந்திய முதலீட்டாளர்களுக்கு அரசு அழைப்பு
இந்திய முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிராந்திய ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.
இந்தியா, இலங்கையில் முதலீடு செய்வதன் மூலம் சுபீட்சத்தை பகிர்ந்து கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இன்றைய தினம் நடைபெற்ற இலங்கையில் முதலீடு செய்யுமாறு அழைக்கும் நிகழ்வு ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இறப்பர், ஆடைத்தொழில், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆறு துறைகளில் முதலீடு செய்யுமாறு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
விசேட பொருளாதார வலயங்களில் கிடைக்கும் நலன்களை முதலீட்டாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக துறைமுக நகரில் முதலீடு செய்யுமாறு அவர் இந்திய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 17 மணி நேரம் முன்

அமெரிக்க - சீனா வர்த்தக ஒப்பந்தம்... முகேஷ் அம்பானியை விட மூன்று மடங்கு சம்பாதித்த நபர் News Lankasri

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
