கோட்டாபயவிற்கு முன்னர் ரணில் பதவி விலகலாம்... எடுக்கப்பட்ட முக்கிய முடிவு
புதிய இணைப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகுமாறு வலியுறுத்துவதற்கு இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகாவிடின் தான் பதவி விலகிவிடுவதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
இன்று மாலை இடம்பெற்ற இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
(16:29)
அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.
இன்று மாலை ஐந்து மணிக்கு இந்த கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.
சபாநாயகரின் அழைப்பு
பொதுமக்களின் கடும் எதிர்ப்பினால் தான் பதவியில் இருந்து விலகுவதாக கோட்டாபய ராஜபக்ச அறிவித்திருந்த நிலையில் இன்று அதிகாலை மாலைதீவை நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அதனைத் தொடர்து பதவி விலகுவதாக அவர் எடுத்த தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில் அவசர கட்சித் தலைவர்கள் கூடடத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.