கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் தவிசாளர் அழைப்பு
வடக்கு - கிழக்கு பகுதிகளில் இராணுவ பிரசன்னத்தினை குறைக்க கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் தவிசாளர் வே.கரிகாலன் அழைப்பு விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் தவிசாளர் வே.கரிகாலன் இன்று (14.08.2025) ஊடக சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
இதன்போதே எதிர்வரும் 18ஆம் திகதி வடக்கு - கிழக்கு ஹர்த்தால் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளதுடன் அதற்கு அழைப்பும் விடுத்துள்ளார்.
ஹர்த்தாலுக்கான அழைப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளார் ஆகியோர் எதிர்வரும் 18ஆம் திகதி கதவடைப்பு ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் இராணுவ பிரசன்னம் தொடர்ச்சியாக அதிகரித்து காணப்படுகின்றது.
புதுக்குடியிருப்பு பிரதேசசபை எல்லைக்கு உட்பட்ட வர்த்தகர்கள், பொது அமைப்புக்கள், பொது மக்கள் அனைவரும் எதிர்வரும் 18ஆம் திகதி கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதன் மூலம் எங்கள் பிரதேசங்களில் இராணுவ பிரசன்னங்களை குறைக்க ஒரு வலுவான போராட்டமாக இது அமையும்.
இளைஞன் உயிரிழப்பு விடயத்தில் மர்மம்
அத்துடன் அண்மையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட ஒட்டுசுட்டான் முத்தையன்கட்டு பகுதியில் இராணுவத்தினால் பாதிக்கப்பட்டு உடலமாக மீட்கப்பட்ட அந்த இளைஞனின் உயிரிழப்பு விடயம் மர்மாக இருக்கின்றது.
அண்மையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நீதியான விசாரணை நடத்தப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் கடந்த காலங்களில் முப்பது ஆண்டுகாலமாக தமிழ் மக்கள் இவ்வாறாக இராணுவத்தாலும் அரச படைகளாலும் பல வழிகளில் எங்கள் பிரதேசங்களை ஆக்கிரமித்து பலவகையில் மக்களுக்கான துன்பியல்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இதுவரைக்கும் அதற்கான நீதியான விசாரணைகள் இந்த நாட்டில் நடந்ததாக தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




