கேக் உள்ளிட்ட பலகாரங்கள் விலை உயர்வு
நாட்டில் புத்தாண்டு காலத்தில் பலகாரங்கள் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு மூலப்பொருட்களின் விலை உயர்வே காரணம் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இனிப்பு வகைகளின் விலை உயர்வு காரணமாக இனிப்புகளுக்கான கேள்வி குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இனிப்புகள் அதிக விலை விற்பனை
அந்தவகையில், கொண்ட கெவும் 70 முதல் 100 ரூபாய் வரையிலும், அதிரசம் 60 முதல் 80 ரூபாய் வரையிலும், ஆஸ்மி 120 முதல் 150 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது.
மேலும், கேக் துண்டு ஒன்றின் விலையும் 40 முதல் 60 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
பல்பொருள் அங்காடிகளில் இந்த இனிப்புகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |