யாழ்.விமான நிலையத்தில் கேக் வெட்டிக் கொண்டாட்டம்! (Photos)
இந்தியாவின் அலையன்ஸ் எயார்லைன்ஸ் விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இன்று (12.12.2022) முற்பகல் 11.30 மணிக்கு தரையிறங்கியது.
இந்த விமானத்தில் இன்றைய ஆரம்ப நிகழ்வுக்கான இந்திய பயணிகள் 28 பேர் வருகை தந்தனர்.
இந்தியா பிரதிநிதிகளை இலங்கை அமைச்சர் மற்றும் இலங்கை அதிகாரிகள் வரவேற்றனர். இதையடுத்து யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் அலையன்ஸ் எயார்லைன்ஸ் (Alliance Air) விமானிகளால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ். மாவட்ட செயலாளர் க.மகேசன் சுற்றுலா துறை பிரதிநிதிகள், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்
தொடர்ச்சியான பல்வேறு முயற்சிகளின் பலனாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பலாலிக்கான விமான சேவையை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவிட் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட பலாலிக்கான விமான சேவை இன்று மீண்டும் ஆரம்பமாகியுள்ளமை, வடக்கு மாகாண மக்களுக்கு மாத்திரமன்றி கிழக்கு மற்றும் அநுராதபுரம் பொலனறுவை போன்ற வட மத்திய மாகாணங்களும் நன்மை பயக்கவுள்ளதாகவும்
கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், அடிப்படையான வசதிகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டிக்கின்றன. விமான நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை கட்டம் கட்டமாக விஸ்தரிப்பதற்கு தேவையான நகர்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட இருக்கின்றது.
இதுதொடர்பாக, இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதுடன் அமைச்சரவையிலும் பிரஸ்தாபிக்கவுள்ளேன்.
இதன்மூலம், எமது பிரதேசத்தின் சுற்றாலாத்துறை வளர்ச்சியடைவதுடன் , ஏற்றுமதி இறக்குமதி செயற்பாடுகளுக்கான நேரடி வாசலாகவும் பலாலி விமான நிலையம் செயற்படும்.
இது எமது மக்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.






அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 11 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
