டில்வின் சில்வாவின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்த CAFFE அமைப்பு

Anura Kumara Dissanayaka Gotabaya Rajapaksa Maithripala Sirisena Ranil Wickremesinghe Election
By H. A. Roshan May 28, 2026 01:00 AM GMT
Report

மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச மற்றும் இடைக்கால அரசில் ரணில் விக்கிரமசிங்க ஆகிய மூவராலும் தனது ஆட்சி காலங்களில் மாகாண சபைத் தேர்தல் குறித்து முடிவெடுத்து, சரியான நேரத்தில் நடத்த முடியவில்லை என CAFFE அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மகீன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று(27.05.2026) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஸ்பெயின் பிரதமரின் கட்சித் தலைமையகத்தில் அதிரடி சோதனை : ஊழல் முறைப்பாட்டில் சிக்கிய அரசு!

ஸ்பெயின் பிரதமரின் கட்சித் தலைமையகத்தில் அதிரடி சோதனை : ஊழல் முறைப்பாட்டில் சிக்கிய அரசு!

மாகாண சபைத் தேர்தல் 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசும் மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக மாகாண சபைத் தேர்தலை மீண்டும் நடத்துவதாக கூறியிருந்தது.

அவர்களின் கொள்கைப் பிரகடனத்தில், ஆட்சி அமைந்த ஒரு ஆண்டுக்குள் தேர்தலை நடத்துவோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேபோல், ஜனாதிபதி வரவு-செலவுத் திட்ட விவாதத்தின் போது 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

டில்வின் சில்வாவின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்த CAFFE அமைப்பு | Caffe Condemns Dilwin Silva S Comments

ஆனால் தற்போது மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, “இந்த ஆண்டு தேர்தலை நடத்த முடியாது, அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் சமீபத்திய டித்வா பேரழிவுக்காக பயன்படுத்தப்பட்டது” என கூறுகிறார்.

மக்களாட்சிசார் அரசு என தங்களை கூறிக்கொண்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை இவ்வளவு எளிதாக மாற்றுவது பொருத்தமற்றது என நிறைவேற்று பணிப்பாளர் சுட்டிக்காட்டுகிறார்.

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணம் இல்லை எனக் கூறி ஒத்திவைத்ததுடன் பணம் இருந்தால் தேர்தலை நடத்தலாம் என்றும் கூறினார்.

ஜனநாயக விரோத செயல் 

அப்போது எதிர்க்கட்சியில் இருந்த தற்போதைய அரசு அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, அது ஜனநாயக விரோதமானது எனக் கூறியது. ஆனால் இப்போது தற்போதைய அரசும் அதே செயலைத்தான் செய்கிறது.

நாடாளுமன்றத்தில் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறி, பின்னர் அந்த பணம் வேறு ஒன்றுக்கு செலவிடப்பட்டது என சொல்வது ஜனநாயக விரோதமான செயல் என்பதை ஜனாதிபதி உட்பட தற்போதைய அரசுக்கு வலியுறுத்த விரும்புகிறோம்.

மாகாண சபை முறைமையை ரத்து செய்ய வேண்டும் என்ற கருத்தும் தற்போது பலரிடையே பேசப்படுகிறது.

டில்வின் சில்வாவின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்த CAFFE அமைப்பு | Caffe Condemns Dilwin Silva S Comments

ஆகையால், இந்த அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல், அதற்குப் பதிலாக வேறு ஒரு முறைமையை முன்வைக்க விரும்பினால் அதை உடனடியாக மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

தேர்தல் அமைப்பில் மாகாண சபைத் தேர்தல் இருப்பதால், அதை விரைவாக நடத்த வேண்டும். அவ்வாறு ஒத்திவைத்தால், அந்த அரசு ஜனநாயகத்தை மதிக்காத அரசாக உலகளவில் கருதப்படும்.

இது குறித்து திறந்த கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும். கலந்துரையாடல் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாடாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுமி மீதான தவறான நடத்தை : கிளிநொச்சி மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சிறுமி மீதான தவறான நடத்தை : கிளிநொச்சி மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ஸ்பெயின் பிரதமரின் கட்சித் தலைமையகத்தில் அதிரடி சோதனை : ஊழல் முறைப்பாட்டில் சிக்கிய அரசு!

ஸ்பெயின் பிரதமரின் கட்சித் தலைமையகத்தில் அதிரடி சோதனை : ஊழல் முறைப்பாட்டில் சிக்கிய அரசு!

மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US