களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிசேரியன் அறுவை சிகிச்சை நிறுத்தப்படும் அபாயம்
சிசேரியன் செய்வதற்கு தேவையான தடுப்பூசி (Heavy Marcaine) கிடைக்காத காரணத்தினால் களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிசேரியன் அறுவை சிகிச்சையை நிறுத்த வேண்டியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வைத்தியசாலையில் கடந்த 11 ஆம் திகதி நடந்த வைத்தியர்கள் கூட்டத்தில், வைத்தியசாலையில் 17 டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பு மாத்திரம் உள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த கையருப்பு வைத்தியசாலையின் தேவைக்கு இரண்டு நாட்களுக்கு மாத்திரமே போதுமான அளவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், உரிய தடுப்பூசிகள் கிடைக்காததால், சிசேரியன் அறுவை சிகிச்சையை நிறுத்துவதுடன், சிசேரியன் அறுவை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் தாய்மார்களை, வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்ற வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |