தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்து பேச்சு!
அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து பேசி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார நெருக்கடி
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணும் நோக்கில் அனைத்து கட்சிகளினதும் பங்களிப்புடன் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய அரசியல் அமைப்பின் பிரகாரம் தேசிய அரசாங்கமொன்றை நிறுவினால் அமைச்சர்களின் எண்ணிக்கையை 60 வரையில் விஸ்தரிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய அரசாங்கம் தொடர்பிலான முனைப்புக்கள் தொடர்பில் ஆளும் தரப்பிலிருந்து இதுவரையில் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
