ஜனாதிபதியாக ரணில் பதவியேற்கும் நிமிடத்தில் செயலிழக்கும் அமைச்சரவை: பேராசிரியர் தகவல்
பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில், புதிய பிரதமரையும் புதிய அமைச்சரவையை தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் அ சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வாக்குகள் அளிக்கப்பட்ட விதத்தை வைத்து பார்க்கும் போது, கட்சிகளுக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளது. கட்சி தலைமைகள் தீர்மானித்ததன் அடிப்படையில்தான் வாக்களித்துள்ளனர் என்று கூற முடியாது.
இன்று குறிப்பாக மொட்டு கட்சியினை பொருத்தவரை இன்னமும் ராஜபக்சவினரின் கட்டுப்பாடு இழக்கப்படவில்லை. மொட்சி கட்சியில் இருந்து கணிசமான வாக்குகள் ரணிலுக்கு சென்றதனால்தான் அவரினால் வெற்றி பெற முடிந்தது. அவ்வாறு கணிசமான வாக்குகள் மொட்டு கட்சியில் இருந்து சென்றிருந்தால் அதற்கு முக்கியமான காரணம் மகிந்த ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்தினருடைய
கட்டுப்பாடு இன்னமும் அந்த கட்சியில் இருக்கின்றது என்றுதான் நாம் அணுமானிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.