21 வது திருத்த அமைச்சரவை அங்கீகாரம்! மீண்டும் பிற்போடப்பட்டது
21 மீண்டும் ஒத்திவைப்பு
அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தத்தை அங்கீகரிப்பதை அமைச்சரவை, மேலும் ஒரு தடவை பிற்போடப்பட்டுள்ளது.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் கூற்றுப்படி, நேற்று கூட்டப்பட்ட வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என்று கொழும்பின் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து, எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள கலந்துரையாடலில் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தெளிவூட்டப்படவுள்ளது.

மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை
இதனையடுத்து, எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்துக்கு அங்கீகாரம் வழங்கப்படவுள்ளது.
ஏற்கனவே, கடந்த வாரம், 21வது திருத்தம் சமர்பிக்கப்படவில்லை. எனினும் கூட்டத்தின் இறுதியில் வரைபின் நகல்கள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டன.
இந்தநிலையில் 21ஆவது திருத்த அங்கீகாரம் இந்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam