பதவி விலகியது ஒட்டுமொத்த அமைச்சரவையும்: நான்கு அமைச்சர்கள் மட்டும் பதவியேற்றது ஏன்..! (Photos)
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில், நேற்று இரவு அமைச்சரவையிலுள்ள ஒட்டுமொத்த அமைச்சர்களும் பதவி விலகுவதாக பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் தங்களது கடிதத்தினை ஒப்படைந்திருந்தனர்.
இந்த நிலையில், தற்போது நான்கு அமைச்சர்கள் மட்டும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.
இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முழு அமைச்சரவையொன்று நியமிக்கப்படும் வரை நாடாளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய செயற்பாடுகளை சட்டபூர்வமாகவும் நிலையானதுமாக முன்னெடுக்கவே நான்கு அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நியமித்தார்.
அனைத்து அமைச்சர்களும் பதவி விலகிய நிலையில், நாடாளுமன்றம் மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கள் மற்றும் நிதியமைச்சகங்களின் செயற்பாடுகளுக்காக சபைத் தலைவர் மற்றும் அரசாங்க பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதால் தான் இந்த அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு தமது பங்களிப்பை வழங்குமாறு நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார்.
இதன்படி, அனைத்து கட்சிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் நிரந்தர அமைச்சரவை நியமிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவாலை முறியடித்து நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் ஜனாதிபதி கோருகிறார் என்றும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் பசில் ராஜபக்சவுக்கு பதிலாக புதிய நிதி அமைச்சராக அலி சப்ரியும், வெளிவிவகார அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
கல்வி அமைச்சராக தினேஸ் குணவர்தனவும், நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.










பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
