ஜனாதிபதி தலைமையில் நாளை முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைச்சரவைக் கூட்டம்!
மிக முக்கிய தீர்மானங்களை எடுக்கும் அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தலைமையில், நாளை (20) திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.
நாட்டில் நிலவும் நிதி நெருக்கடிக்கான தீர்வுகள், புதிய ஆண்டின் அமைச்சரவை மற்றும் அரச அதிகாரிகளின் மாற்றங்கள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளன.
அடுத்த வருடத்தின் ஆரம்பப் பகுதியில் அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசு எதிர்பார்த்துள்ளது என அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைவாக பிரதான அமைச்சுக்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் அரசின் வேலைத்திட்டங்களைப் புத்துணர்ச்சியுடனும், வேகத்துடனும் முன்னெடுப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளதுடன், அமைச்சரவை மாற்றமும் அதற்கேற்றால் போல் இடம்பெறவுள்ளது எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், அமைச்சரவை மாற்றம் தொடர்பிலும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.