வெளிநாடுகளில் ஆபத்தில் சிக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு
வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு ஏதேனும் ஆபத்து அல்லது அசௌகரியம் ஏற்பட்டால், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு ஒரே நேரத்தில் அறிவிக்கும் திறன் கொண்ட டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய உலகிற்கு ஏற்ற வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கு இது வழி வகுக்கும் எனவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிவித்துள்ளார்.
மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் முறைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகளை தெரிவிக்க பணிபுரியும் பகுதிகளில் உள்ள தூதரகங்களின் எண்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் மயமாக்க அமைச்சரவை ஒப்புதல்
இதற்கமைய, டிஜிட்டல் மயமாக்கல் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், முழு அமைப்பும் மாறும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முழு அமைப்பையும் ‘டிஜிட்டல்’மயமாக்க அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், தூதரகம் முதல் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வரை அனைத்தும் மாற்றத்திற்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த அமைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும், ஒவ்வொரு தொழிலாளியும் தனது பிரச்சினைகளை தொலைபேசியில் உள்ள இந்த 'செயலி' ஊடாக உடனடியாக கொழும்பில் உள்ள தூதரகத்திற்கு அல்லது தொடர்புடைய நபர்களுக்கோ செய்தியினை அனுப்பிவைக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம், சம்பந்தப்பட்ட நபரைத் தொடர்புகொள்ளும் முறைமை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், டிஜிட்டல் முறை அமையும் போது, இதுபோன்ற பல பிரச்சினைகள் குறையும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
