அதானி குழுமத்தின் மின் உற்பத்திக்கு அமைச்சரவை அங்கீகாரம்
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தால் (M/s Adani Green Energy Limited) நிறுவப்படவுள்ள காற்றாலை மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் (kanchana wijesekera) இந்த அமைச்சரவைப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 20 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்யப்படும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்
இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான இறுதிக் கட்டணமாக ஒரு கிலோவாற்று மணிக்கு 8.26 அமெரிக்க டொலர்கள் (இலங்கை ரூபாயில் செலுத்தப்பட வேண்டிய உண்மையான மாற்று விகிதத்திற்கு உட்பட்டது) கட்டணமாக ஏற்றுக்கொள்ளவும் முன்மொழியப்பட்டுள்ளது.
மார்ச் 07, 2022 அன்று, மன்னார் மற்றும் புனரின் பகுதிகளில் காற்றாலை மின் நிலையங்களை நிறுவுவதற்கு அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
நிறுவனம் சமர்ப்பித்த திட்ட அறிக்கையை மதிப்பீடு செய்ய அமைச்சரவை "பேச்சுவார்த்தை ஒருமித்தக் குழுவை" நியமித்தது. முன்மொழியப்பட்ட திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலை மேற்கூறிய குழுவின் பரிந்துரையின் பேரில் தீர்மானிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
எதிர்நீச்சல் சீரியலில் வில்லன் ராவணன் ஆதிமுத்துவாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் இவர்தான்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri