காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள விசேட நடவடிக்கை!
காணாமல் போனோர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக 25 விசாரணை சபைகளை நியமிக்க நீதியமைச்சு தீர்மானித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க சட்டத்தின் ஏற்பாட்டில் காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் பிராந்திய அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், அந்த அலுவலகங்களுக்கு காணாமல் போனவர்கள் தொடர்பாக 14,988 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்தச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக முறையான விசாரணைகளை மேற்கொண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அறிக்கைகளை வழங்குவது உட்பட இந்த அலுவலகம் பெரும் பங்காற்ற வேண்டியுள்ளது.
இந்த முறைப்பாடுகளை விரைவுபடுத்துவதற்கும் துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் 25 விசாரணை சபைகளை நியமிக்குமாறு நீதி அமைச்சர் அலி சப்ரி அமைச்சரவைக்கு முன்மொழிந்துள்ளார்.
இதன்படி கடந்த 7ம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நீதியமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
