தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைவது குறித்து பேச்சுவார்த்தைக்கு பிறகே முடிவு
தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து போட்டியிடும் கோரிக்கை தொடர்பில் தமிழ் பொதுக் கட்டமைப்புடன் பேசியே முடிவெடுக்க முடியும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அனைவரும் ஒன்றிணையும் கோரிக்கை தொடர்பில் விக்னேஸ்வரனிடம் தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்வைக்கப்பட்ட கோரிக்கை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை ஓரணியில் எதிர்கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம். நாங்கள் தமிழரசு காட்சி தவிர்ந்த ஒரே நிலைப்பாட்டில் பயணிக்கின்ற தமிழ் கட்சிகள் தமிழ் பொதுக் கட்டமைப்பாக ஒன்றிணைந்து செயற்படுகின்றன.
தமிழரசு கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பாக தேர்தலில் போட்டியிடும் கோரிக்கையை முன்வைத்திருக்கும் நிலையில் உடனடியாக அதற்கு சம்மதம் தெரிவிக்க முடியாது.
ஏனெனில், தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பாக நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிற நிலையில் குறித்த வடையான் தொடர்பில் சக தமிழ் கட்சிகள் தலைவர்களுடன் பேசி இறுதி முடிவை தெரிவிப்போம்” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri
