பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கை
ஒவ்வொரு மாகாணத்திற்கும் வெவ்வேறு பிரச்சினைகள் இருப்பதால் பிராந்திய சபைகளை அமைக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்ததாக, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், வடக்கில் உள்ள பிரச்சினைகள் தெற்கில் உள்ள பிரச்சினைகளை விட வித்தியாசமானவை.

மாகாணங்களுக்கான பிராந்திய சபைகள் அமைப்பு
இதன்போது, ஒவ்வொரு மாகாணத்திலும் பிராந்திய சபைகளை ஸ்தாபிக்குமாறு குணவர்தனவிடம் யோசனை தெரிவித்துள்ளோம்.
புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட தேசிய சபையில் அங்கம் வகிக்க எமக்கு சம்மதமில்லை.

யாழ்ப்பாணத்தில் இருந்து ஏழெட்டு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக பயணிக்க வேண்டியிருப்பதாலும், தெற்கிற்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை குறித்த
சபை கையாள்வதாலும், அதில் கலந்து கொள்வதில் பிரயோசனமில்லை என தெரிவித்துள்ளார்.
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 8 நிமிடங்கள் முன்
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan