பேரிடரின் போது யாழில் தரையிறங்கிய C-130J விமானத்தின் பெண் விமானி
இலங்கையில் டிட்வா புயலின் தாக்கத்தின் பின்னர், நிவாரண மற்றும் மீட்பு பணிகளுக்காக அமெரிக்க C-130J விமானங்கள் இலங்கைக்கு வந்திறங்கின.
குறித்த மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த அமெரிக்க முப்படையில் பெண் படையினருக்கும் அமெரிக்கா முக்கியத்துவம் வழங்கியிருந்தது.
நிவாரண நடவடிக்கைகள்
அதன்படி, கடந்த 10ஆம் திகதி நிவாரண பொருட்களை அநுராதபுரத்திற்கும், யாழ்ப்பாணத்திற்கும் எடுத்துச் செல்ல வந்திறங்கிய C-130J விமானத்தை கெப்டன் சாரா ரிக்ஸ் என்ற பெண் விமானி செலுத்தியுள்ளார்.

சாரா ரிக்ஸ், அமெரிக்க விமானப்படையில் ஒரு கெப்டன் மற்றும் KC-135 விமானி ஆக கடமையாற்றி வருகின்றார்.
2019ஆம் ஆண்டு விமானத்தை இயக்கிய அனைத்து பெண் விமானக் குழுவினரில் அவரும் ஒருவர் என வலைதள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இவ்வாறான ஒரு பேரிடர் நிலை ஏற்பட்டுள்ள போது, அமெரிக்கா பெண் படையினருக்கு வழங்கப்பட்ட முன்னுரிமைகளை பலரும் வரவேற்றுள்ளனர்.





குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri