பொலிஸார் எதற்கு உள்ளனர்! மின்சார சபை ஊழியர்களால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்!
சுகவீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து மின்சார சபை தொழிற்சங்கங்கள் தற்போது கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பின்னணியில் பொதுமக்களும் சாரதிகளும் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
மின்சார சபையின் கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பின்னணியில் அங்கு கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நீண்ட நேரமாக வீதியில் காத்துக்கிடக்கும் சாரதிகள் தங்கள் கருத்துக்களை கோபமாக வெளியிட்டுள்ளனர்.
சிறந்த கொடுப்பனவு
இதன்போத கருத்து தெரிவித்த சாரதி ஒருவர்,
சிறந்த கொடுப்பனவு மற்றும் சம்பளம் வழங்கப்படும் மின்சார சபை ஊழியர்களின் நடத்தை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
புதிய அரசாங்கத்திற்கு 3இல் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ள போதிலும் அதனை பயன்னடுத்தி சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பொலிஸார் எதற்காக
இல்லாவிட்டால் இவ்வாறு போராட்டம் செய்பவர்களை பொலிஸாரை பயன்படுத்தி கட்டுப்படுத்தவேண்டும். பொலிஸார் எதற்காக உள்ளனர்? இதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களே அவர்களை விரட்டியடிக்க நேரிடும்.
அன்றாட வேலைகளுக்கு செல்லும் பலர் தற்போது இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். தயவு செய்து இவர்களுக்கான ஒரு முடிவை வழங்குங்கள்.
இல்லை என்றால் இவர்களை வெயியேற்றுங்கள். மின்சார சபை ஊழியர்கள் மாத்திரம் நாட்டில் உழைக்கும் வர்க்கத்தினரல்ல ” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




