விவசாயத்தில் இரசாயண பயன்பாடு மண்ணை முற்றாக அழித்துவிடும்:ஆளுநர் அனுராதா யகம்பத்(Photos)
விவசாயத்திற்கு இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டால் 2050 ஆம் ஆண்டளவில் எமது மண் முற்றாக அழிந்துவிடும். அப்படி நடந்தால் மண்ணை மீட்க முடியாது என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமான "பீஸ் வின்" மூலம் திருகோணமலை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,“எங்கள் மண்ணைப் பாதுகாப்பதை ஒருபோதும் தள்ளிப்போடக் கூடாது. இன்று முதல் நாம் அதனை பின்பற்ற வேண்டும்.
எமது நாட்டில் 02 ஏக்கர் நெற்செய்கையை மேற்கொள்ளும் பெருமளவிலான விவசாயிகள் உள்ளனர்.
பொருட்களின் தேவை
திருகோணமலை மாவட்டத்தில் மட்டுமன்றி கிழக்கு மாகாணம் முழுவதிலும் உள்ள விவசாயிகள் இவ்வாறான விடயங்களுக்குப் பழகிக்கொள்ள வேண்டும். விஷமில்லா உணவுக்காக ஜப்பானில் மிக முக்கியமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய பொருட்களுக்கு நல்ல தேவை உள்ளது.
எனவே, இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு உதவி வழங்கியதற்காக ஜப்பான் தூதருக்கு நான் குறிப்பாக நன்றியுள்ளவராக இருக்கிறேன்.”என்று தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகியும் கலந்துகொண்டார்.
விசேட சந்திப்பு
இந்த வைபவத்தின் பின்னர் ஜப்பானிய தூதுவருக்கும் ஆளுநருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் விவசாயம், தொல்லியல் மற்றும் சுற்றுலா துறைகளுக்கு ஜப்பானில் இருந்து புதிய முதலீட்டாளர்களை வரவழைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென ஆளுநர் அங்கு கோரிக்கை விடுத்தார்.
மேலும், திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் ஜப்பான் அரசாங்கத்தின் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக தூதரிடம் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
