வைத்திய சான்றிதழ் வழங்குவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது
ஆயுர்வேத மருத்துவ சபையினால் பரம்பரை வைத்தியருக்கு பாரம்பரிய வைத்திய சான்றிதழை வழங்குவதாக வாக்குறுதியளித்து இலஞ்சம் பெற முயன்ற வர்த்தகர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் நேற்று (22) கொழும்பு அரச விடுதி ஒன்றில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பனமுர வைத்தியர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் கைது
கைது செய்யப்பட்டவர்களில், களனியைச் சேர்ந்த ஒருவர், பிரத்தலாவையைச் சேர்ந்த ஒரு வர்த்தகர் மற்றும் நாவலப்பிட்டியை தளமாகக் கொண்ட ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தின் இணைப்பாளரும் அடங்குவர்.
ஆயுர்வேத வைத்திய சபையால் வழங்கப்பட்ட பாரம்பரிய மருத்துவச் சான்றிதழை அந்தத் துறையின் ஆணையாளரின் அனுமதியோடு தருவதாகக் கூறி இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
