கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தொழிலதிபர்!
சட்டவிரோதமாக முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் கம்பஹா பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய தொழிலதிபர் ஆவார்.
மேலதிக விசாரணை
துபாயில் இருந்து வந்த சந்தேக நபர், 15,000 சிகரெட்டுகள் அடங்கிய 75 சிகரெட் அட்டைப்பெட்டிகளை மறைத்து வைத்திருந்தபோது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதன்போது, பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் தொகையின் மதிப்பு இரண்டு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் என சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri
