கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தொழிலதிபர்
இலங்கைக்குள் பெருமளவிலான வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பணத்தின் மொத்த மதிப்பு ரூ.24.09 மில்லியன்
சந்தேக நபர் இந்தியாவின் பெங்களூரில் இருந்து கடடுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்நதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதானவர் 48 வயதான கண்டி அக்குரணையில் வசிக்கும் தொழிலதிபர் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தனது உடைமையில் யூரோ 48,900, அமெரிக்க டொலர் 14,000 மற்றும் இந்திய ரூபாய் 26,650 ஆகியவற்றை மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மொத்த மதிப்பு ரூ.24.09 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.