இந்திய வீரர்களின் மொத்த வணிக மதிப்பு பல பில்லியன் டொலர்களால் உயர்வு
உலகக் கிண்ணத்தை வெற்றிக்கொண்ட இந்திய அணியின் பதினொரு வீரர்களினதும் மொத்த வணிக மதிப்பு பல பில்லியன் டொலர் அளவில் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் சந்தை மதிப்பைக் காட்டிலும் இந்த மதிப்பு அதிகமாக உயர்ந்துள்ளது என கருத்து நிலவுகிறது.
முதலீட்டு வங்கியான ஹோலிஹான் லோக்கே (Houlihan Lokey) மதிப்பீட்டின் படி, ஐபிஎல் தொடரின் மொத்த சந்தை மதிப்பு தற்போது 16.4 பில்லியன் டொலர்களாகும்.அதாவது 1,36,858 கோடி ரூபாயாகும்.
இந்தநிலையில் டி20 உலகக் கிண்ணப் போட்டி வெற்றிக்கு பின்னர், முக்கிய ஆட்டக்காரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மாவின் சந்தை மதிப்பு இரட்டிப்பாகியுள்ளது.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஏற்கனவே கையெழுத்திட்டு உள்ள சில விளம்பர ஒப்பந்தங்களில் சில தற்போது முடியும் தறுவாயில் உள்ளன.
இந்த சில ஒப்பந்தங்களின் மதிப்பு உலக கிண்ணத்துக்கு பின்னர், கிட்டத்தட்ட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன.
இதேபோல் ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரிட் பும்ரா, சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், அர்ஸ்தீப் சிங், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் சிவம் துபே போன்ற முக்கிய வீரர்களின் ஒப்பந்த மதிப்பும் குறைந்தது 50 முதல் 70 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் விளம்பர சந்தையில் டி20 இந்திய அணியின் மொத்த மதிப்பு பல பில்லியன் ரூபாயாக இருக்கும் என்று ரெடிஃப்யூஷன் (Rediffusion) நிறுவனத்தின் தலைமை அதிகாரி சந்தீப் கோயல் தெரிவித்துள்ளார்.
மறுமுனையில் இந்த மாபெரும் வெற்றிக்காக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசை ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |