சுவர்ணமஹால் நிதிச் சேவை பி.எல்.சி நிறுவனத்தின் வணிகத்தை இடைநிறுத்த தீர்மானம்
2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதி வணிகச் சட்டத்தின் கீழ் சுவர்ணமஹால் நிதிச்சேவை பி.எல்.சி நிறுவனத்தின் வணிகத்தை இடைநிறுத்த இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை தீர்மானித்துள்ளது.
இந்த தீர்மானம் நேற்று மாலை 5 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக மோசமடைந்து வரும் நிதி நிலை மற்றும் சாத்தியமான மீளமைப்பு திட்டம் தொடர்பில் ஏற்கனவே 3 மாதங்களுக்கு நேற்று வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது.
எனினும் அந்த காலக்கெடுவுக்குள் நிறுவனத்தின் செயல்பாடு தோல்வி கண்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வைப்பாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கும் திகதி விரைவில்
அறிவிக்கப்படும் என்றும் மத்திய வங்கியின் நாணயச்சபை அறிவித்துள்ளது.

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
