கொழும்பின் புறநகர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகர் கொலை செய்யப்பட்டாரா..! விசாரணை தீவிரம்
தலங்கம - பெலவத்த பிரதேசத்தில் 3 மாடி வீடொன்றில் நீச்சல் தடகத்திலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ள வர்த்தகர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த விடயத்தை பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மேலும், பெலவத்தை எம்.டி.எச்.பெரேரா மாவத்தையில் அமைந்துள்ள மீள் புதுப்பிக்கப்பட்டு வரும் வீடொன்றில் நீச்சல் தடாகத்தில் ஆணொருவரின் சடலம் காணப்படுவதாக நேற்று (02.02.2023) பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதோடு, விசாரணைகளையும் ஆரம்பித்திருந்தனர். அதற்கமைய குறித்த நபர் கடந்த 30ஆம் திகதி அவரது வர்த்தக நிலையத்திற்குச் சென்று இந்த வீட்டின் சாவியைப் பெற்றுக் கொண்டமை தெரியவந்துள்ளது.
30 மற்றும் 31ஆம் திகதிகளில் இந்த நபர் வீட்டுக்கு வருகை தராமையால் அவரது சகோதரி அது தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார். அதற்கமைய வெல்லம்பிட்டி பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
அவர் கடந்த 30ஆம் திகதி காரில் வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், குறித்த வீட்டுக்கு அருகில் கார் காணப்படவில்லை. அத்தோடு அவரது கையடக்க தொலைபேசி மற்றும் பண பர்ஸ் அங்கு காணப்படவில்லை. இது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைளை முன்னெடுத்து வருகின்றனர்.
சி.சி.ரி.வி. காணொளி பதிவுகள் எவையும் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னரே இறந்துள்ளதாக தெரியவந்துள்ளதுடன் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் குற்றதடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கொழும்பின் புறநகரான பெலவத்தையில் சொகுசு வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட தொழிலதிபரின் வாகனம் நீர்கொழும்பிலுள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனவரி மாதம் 30ஆம் திகதி முதல் குறித்த தொழிலதிபர் காணாமல் போயிருந்த நிலையில், தனது சகோதரர் வீடு திரும்பவில்லை என அவரின் சகோதரி பெப்ரவரி முதலாம் திகதி வெல்லம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சடலமாக மீட்பு
இதனையடுத்து பெலவத்தில் நிர்மாணப் பணியின் கீழ் உள்ள தொழிலதிபரின் வீடொன்றை சோதனையிட்டபோது அவர் அங்கு சடலமாக காணப்பட்டுள்ளார்.
தொழிலதிபரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பிரபல ஆடையகம் ஒன்றின் உரிமையாளரான ரொசான் வன்னிநாயக்க என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த தொழிலதிபர் சடலமாக மீட்கப்பட்ட நீச்சல் குளத்தின் அருகே இரத்தகறைகளும் காணப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
விமான அனுமதிச்சீட்டுக்கள் கொள்வனவு
இதேவேளை உயிரிழந்த தொழிலதிபரின் பணப்பையில் இருந்து நான்கு கடன் அட்டைகள் காணாமல் போயுள்ளதுடன் அதன் மூலம் இந்தோனேசியாவிற்கு ஐந்து விமான அனுமதிச்சீட்டுக்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஒரு விற்பனையகம் ஒன்றில் இருந்து 5 இலட்சம் ரூபாவுக்கு பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி News Lankasri

அரங்கத்தில் புடவை கட்டி நின்றால்...! கேவலமாக இருப்பதாக கூறிய பெண்: கோபிநாத்தின் பதில் என்ன? Manithan

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் News Lankasri
