சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பேருந்துகளில் விசேட சோதனை நடவடிக்கை
எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் நலன் கருதி மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அதிகாரிகள் பேருந்துகளை சோதனை செய்யும் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
நுவரெலிய மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆராச்சியின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முக்கிய வங்கியில் பாரிய உள்மோசடி! சிக்கிய பலர் - வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
விசேட சோதனைகள்
அதன்படி நேற்று மாலை (07) நுவரெலியா - ஹட்டன் ஏ7 பிரதான வீதியை உள்ளடக்கும் வகையில் நானுஓயா நகரில் விசேட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பயணிகளிடம் அதிக பணம் வசூலிப்பது, மீதி பணத்தை தராமல் இருப்பது, டிக்கெட் வழங்காமை, அதிக சத்தம் எழுப்பும் வகையில் ஒலிபெருக்கி பயன்படுத்துவது, பேருந்தில் பல்வேறு அலங்காரங்கள் குறித்து சோதனை நடத்தப்பட்டது.
பயணிகளிடம் இருந்து தொடர்ந்து கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது நுவரெலியாவிலிருந்து ஹட்டன் வரை சென்ற சொகுசு பேருந்து ஒன்றில் நடத்துனர் தலவாக்கலை வரை சென்ற பயணிகளிடம் 300 ரூபாய் பணம் அறவிடப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மேலாக இருந்த பயணிகள் பயணம் செய்ய பேருந்துக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கை
நுவரெலியா - ஹட்டன் அரை சொகுசு பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மட்டுமே பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் எனவும், குளிரூட்டப்படுதல் அவசியம் எனவும் இதன்போது சாரதிகளுக்கும் நடத்துனர்களுக்கும் எச்சரிக்கை வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நுவரெலியா - ஹட்டன் சொகுசு வகைகளின் கீழ் இயங்கும் தனியார் பேருந்துகள், பேருந்தில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கையை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதாக பயணிகளிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன்படி விதிமீறல் இருந்த அனைத்து பேருந்துகளுக்கும் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சொகுசு பேருந்துகளில் சாதாரண பேருந்து கட்டணத்தை விட இருமடங்கு கட்டணமும் அறவிடப்படுகிறது.
தற்போது திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்களை பேருந்துகளுக்குள் பயணிகளுக்கு காட்சிப்படுத்துமாறும் அவ்வாறு செய்யாத பேருந்துகளின் உரிமங்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இரத்து செய்யப்படும் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

