தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் அதிரடி முடிவு! பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
இன்று முதல் பாடசாலை மற்றும் அலுவலக நேரங்களில் மாத்திரம் பேருந்துகளை இயக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அதிரடி முடிவெடுத்துள்ளது.
டீசல் தட்டுப்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பேருந்து பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இன்றைய தினம் உரிய அளவிலான எரிபொருள் கிடைக்காவிட்டால், நாட்டிலுள்ள 75% தனியார் பேருந்துகளின் சேவையை நிறுத்த நேரிடும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டீசல் ஏற்றி வரும் கப்பல்கள் இலங்கையை அடைய மேலும் இரண்டு நாட்கள் தாமதமாகும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த கப்பல்கள் திங்கட்கிழமை (பிப்ரவரி 28) இலங்கைக்கு வரும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எரிபொருள் சரக்குகளை ஏற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
