தேசிய மக்கள் சக்தியின் பேரணிக்கு வருகைத்தந்த பேருந்துகள் தொடர்பில் விசாரணை
தேசிய மக்கள் சக்தியின் மே தின பேரணிக்காக வருகைத்தந்த பேருந்துகள் சில அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த நெடுஞ்சாலையில் நின்று உணவருந்தியமை தொடர்பிலேயே குறித்த பேருந்துகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வெலிப்பண்ண பகுதிக்கு அருகில் குறித்த பேருந்துகளின் சாரதிகள் வீதியில் பேருந்தை நிறுத்தி மதிய உணவு இடைவேளை எடுப்பதைக் காட்டும் காணொளியானது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சட்ட நடவடிக்கை
அப்படி நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அதிவேக நெடுஞ்சாலையிலோ அல்லது நெடுஞ்சாலையின் எந்தப் பகுதியிலோ வாகனங்களை நிறுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
