தென்னிலங்கையில் விபத்தில் சிக்கிய பேருந்து - மாணவர்கள் உட்பட 15 பேர் காயம்
ஹொரணை - ரத்னபுர வீதியில் இங்கிரிய மாவட்ட மருத்துவமனைக்கு அருகில் தனியார் பேருந்தும் சிறிய லொறியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் லொறி ஓட்டுநர் மற்றும் உதவியாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் இங்கிரிய மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக சிகிச்சை
ஆபத்தான நிலையில் இருந்த லொறி சாரதியின் உதவியாளர் உட்பட பல பாடசாலை மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஹொரணை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தும், இங்கிரிய நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த சிறிய லொறி ஒன்றுமே இவ்வாறு மோதுண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.
இங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
