மீண்டும் பேருந்து கட்டணங்களில் திருத்தம்! வெளியான தகவல்
இலங்கையில் மீண்டும் பேருந்து கட்டணங்கள் திருத்தம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தை இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மீண்டும் பேருந்து கட்டணத்தில் திருத்தம்
இது குறித்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறுகையில், எதிர்வரும் ஜூலை மாதம் மீண்டும் பேருந்து கட்டணங்கள் திருத்தப்படும்.
உதிரிப்பாகங்களின் விலைகளை குறைக்கும் பட்சத்தில், அதன் நன்மையை பயணிகளுக்கு வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதால் கடந்த வாரம் பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடுமையான கட்டுப்பாடு
மேலும், மேல் மாகாணத்தில் பயணிக்கும் பேருந்துகளில் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பயணிகளிடமிருந்து கூடுதலான கட்டணத்தை அறவிடும் பேருந்து வண்டிகளின் சாரதிகளுக்கும், நடத்துனர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.