இலங்கை போக்குவரத்து வரலாற்றில் முதன்முறையாக ஏற்பட்ட மாற்றம்
இலங்கை போக்குவரத்து வரலாற்றில் முதன்முறையாக, ஒருவழி பேருந்துக் கட்டணம் 5,000 ரூபாவை எல்லையை தாண்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
பேருந்து கட்டண திருத்தம்
தேசிய போக்குவரத்துக் கொள்கையின்படி, ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பேருந்துக் கட்டணத் திருத்தத்திற்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தக் கட்டணத் திருத்தத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க விடயமாக, முன்னர் 4,405 ரூபாவாக இருந்த அதிகபட்ச நீண்ட தூர சூப்பர் சொகுசுப் பேருந்துக் கட்டணம் 5,571 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
நாட்டில் ஒருவழிப் பேருந்துக் கட்டணம் 5,000 ரூபா என்ற எல்லையைத் தாண்டுவது இதுவே முதல் முறை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மூன்றாவது கட்டண படிநிலை
புதிய திருத்தத்தின்படி, குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் 30-ரூபாவிலிருந்து 4 ரூபா அதிகரிக்கப்பட்டுஇ 34 ரூபாவாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும், 39 ரூபாவாக இருந்த இரண்டாவது கட்டணப் படிநிலை 44 ரூபாவாகவும்இ 50 ரூபாவாக இருந்த மூன்றாவது கட்டணப் படிநிலை 56 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam