இலங்கையில் மக்களுக்கு அடுத்தடுத்து பேரிடிகள்! பேருந்து பயணிகளுக்கும் அதிர்ச்சி செய்தி
பேருந்து கட்டணங்களை உயர்த்த வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் என்பனவற்றினால் விற்பனை செய்யப்படும் எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
இந்த எரிபொருள் விலை ஏற்றத்திற்கு அமைய பேருந்து கட்டணங்களை குறைந்தபட்சம் 50 வீதத்தினால் உயர்த்த வேண்டுமென அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஆகக்குறைந்த கட்டணம் முதல் அனைத்து கட்டணங்களும் உயர்த்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் டீசல் விலையை உயர்த்தினால், பேருந்து கட்டணத்தை அதிகரிக்கப் போவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நேற்றைய தினம் தெரிவித்திருந்தது.
மேலும், டீசல் விலை உயரும் பட்சத்தில் பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் உட்பட மொத்த பேருந்து கட்டணம் 50 சதவீதத்திற்கு உயர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி சீசன் 6 ரசிகர்களுக்கு வந்த ஒரு தகவல்.. திடீரென நடந்துள்ள மாற்றம், என்ன தெரியுமா? Cineulagam

பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்கிய இந்திய விமானப்படை: BrahMos பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு News Lankasri
