இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கோர விபத்து! சாரதி தொடர்பில் வெளியான தகவல்
பொலன்னறுவை-மனம்பிட்டிய பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிவேகமாக பேருந்து பயணித்ததில் பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தில் இருந்து பேருந்து ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலதிக விசாரணை
முன்னர் ஆபத்தான வாகனம் செலுத்தியமைக்காக, குறித்த பேருந்து சாரதிக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
எவ்வாறாயினும், விபத்து இடம்பெறும் போது சாரதி மதுபோதையில் இருக்கவில்லை எனவும், அவர் வேறு ஏதேனும் போதைப்பொருளை பயன்படுத்தினாரா என்பது குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில், சம்பவதினமான நேற்றைய தினம் ஏறாவூரைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 3 பேரும் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரும் மற்றும் ஆனைமடுவ கலாவத்தை பிரதேசங்களைச் சேர்ந்த இரு பல்கலைக்கழக மணவர்கள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்துள்துடன் சிகிச்சை பலனின்றி இன்று திங்கட்கிழமை பகல் ஒரு பெண் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு 12 பேராக அதிகதித்துள்ளது.
இதேவேளை காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 40 பேரில் சிலர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும் இந்த விபத்தின் போது சிறு காயங்களுக்குள்ளான நிலையில் தப்பிய ஊடகவியலாளர் ஒருவர் உட்பட சிலர் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சாரதி ஏற்கனவே ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில் அபதாரம் விதிக்கப்பட்டுள்ளவர் எனவும் இவர் போதைபொருள் பாவித்துள்ளாரா என விசாரணை முன்னெடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைளை மன்னம்பிட்டி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
மேலதிக தகவல்-பவன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |