பேருந்து விபத்தில் இறந்த அடையாளம் தெரியாதவரின் சடலம் மருத்துவமனையில் வைப்பு
நேற்றைய தினம் கொத்மலை - கெரண்டியெல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
கெரண்டியெல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்கு உள்ளாகியிருந்தது.இந்த சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
பேருந்து விபத்து
இவர்களில் பெரும்பாலானவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனையின் பின்னர் நேற்றைய தினமே உறவினர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தன.
அடையாளம் காணப்பட்ட இன்னும் சிலருடைய சடலங்கள் இன்றைய தினம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் குறித்த பேருந்து விபத்தில் இறந்த அடையாளம் தெரியாத ஒருவருடைய சடலம் கம்பளை மருத்துவமனையில் தொடர்ந்தும் வைக்கப்பட்டுள்ளது.





CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam

சிந்தாமணியை வைத்து மீனாவை அழ வைக்க ரோஹினி போட்ட கேவலமான பிளான்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி News Lankasri
