ஈரானில் பாகிஸ்தான் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து விபத்து
மத்திய ஈரானில் (Iran) பாகிஸ்தான் (Pakistan) யாத்ரீகர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தில் மேலும் 23 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் 07 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை உயிரிழந்த 28 பேரில் 11 பெண்களும் 17 ஆண்களும் அடங்குவர் எனவும், 6 பேர் சிகிச்சைப்பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தடுப்பில் கோளாறு
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இருந்து ஈரான் வழியாக ஈராக்கின் கர்பலா நகருக்கு சென்று கொண்டிருந்த போது இந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், பேருந்தின் தடுப்பு முறைமையில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam
