அதிகாலையில் உறக்கத்தில் ஆழ்ந்த சாரதி.. 20 பயணிகளுடன் விபத்துக்குள்ளான பேருந்து
காலி - கொழும்பு பிரதான வீதியில், காலியின் தாதல்ல பகுதியில் இன்று காலை (04) பயணிகள் பேருந்து ஒன்று சாலையிலிருந்து விலகி சுவரில் மோதி ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயணிகள் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மூன்று பேர் படுகாயம்
விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 20 பயணிகள் பயணம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து தாதல்ல பகுதியில் ஓட்டுநர் உறங்கியதால், வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையிலிருந்து விலகிச் சென்று அருகிலிருந்த சுவரில் மோதியது தெரியவந்துள்ளது.
விபத்தில் பேருந்து பலத்த சேதமடைந்துள்ளதுடன், இவ்விவகாரம் குறித்து காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan