கதிர்காம யாத்திரிகர்களை இறக்கி விட்டு பயணித்த பேருந்து விபத்து
கதிர்காமம் சென்று திரும்பிய யாத்திரிகர்களை மட்டக்களப்பு - ஆரையம்பதியில் இறக்கிவிட்டு திரும்பிய பேருந்து கிரான்குளத்தில் விபத்தில் சிக்கிய நிலையில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த பேருந்து இன்று காலை (30) கிரான்குளம் பகுதியில் வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மூவர் காயம்
கதிர்காமம் புனித யாத்திரையை நிறைவு செய்த யாத்திரிகர்களை ஆரையம்பதியில் இறக்கி விட்டு தேற்றாத்தீவு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த பேருந்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெறும் போது பேருந்தில் சாரதியும், உதவியாளர்கள் இருவரும் இருந்துள்ள நிலையில் மூவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri