மாகாண சபை கலைக்கப்பட்டும் பயன்படுத்தப்பட்ட இல்லங்கள்! கணக்காய்வில் வெளிவந்த தகவல்
சப்ரகமுவ மாகாண சபையில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வின் போது, சபை கலைக்கப்பட்டு ஐந்து வருடங்களின் பின்னரும் உத்தியோகபூர்வ பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட விடுமுறை இல்லங்களை முன்னாள் சபை உறுப்பினர்கள் தொடர்ந்து பயன்படுத்தியமை தெரியவந்துள்ளது.
2021 ஆம் நிதியாண்டிற்கான அரச கணக்காய்வின்படி, உறுப்பினர்கள் இல்லங்களை தொடர்ந்து பயன்படுத்தியதால் மின்சாரம் மற்றும் நீர் ஆகிய இரண்டுக்குமான கட்டணமாக 4.7 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
பெறுமதி வாய்ந்த தளபாடங்கள்
மாகாணசபை உறுப்பினர்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள், 29 மில்லியன் ரூபாய் மதிப்பிலான தளபாடங்கள் கொண்ட 11 குளிரூட்டப்பட்ட அறைகளைக் கொண்டிருக்கின்றன.
இந்தநிலையில் கணக்காய்வின் பின்னர், தற்போது, இல்லங்கள் பூட்டப்பட்டு, மறு
அறிவிப்பு வரும் வரை பராமரிப்பு பணிகளுக்காக இரண்டு தொழிலாளர்கள் பணியில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
