மக்கள் நலன்சார்ந்த வகையில் வரவு செலவு திட்டம்: வியாழேந்திரன் உறுதி
மக்கள் நலன்சார்ந்த வகையிலேயே இம்முறை வரவு செலவு திட்டம் வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் நேற்றையதினம் (01.11.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இக்கட்டான சூழ்நிலை தற்போதைய ஜனாதிபதி தான் ஆட்சியை பொறுப்பெடுத்தார் விமர்சனங்கள் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் முடிந்த அளவு சேவைகளை செய்து கொண்டிருக்கின்றார். இந்த நிலைமையில் குழப்பங்களை ஏற்படுத்தி மீண்டும் அதாளபாதளத்திற்கு கொண்டு செல்லமுடியாது.
நாடு ஒரு பொருளாதார வீழ்ச்சியை கண்டு படிப்படியாக மேலே வந்தாலும் இன்னும் விலைகள் குறைக்கப்படவில்லை சில இடங்களில் விலைகள் குறைக்கப்பட்டாலும் அது வர்த்தக நிலையங்களில் குறைக்கப்படவில்லை, எது எவ்வாறாக இருந்தாலும் வருகின்ற வருடம் ஒரு தேர்தலுக்கு அரசாங்கம் முகம் கொடுக்கப் போகின்றது ஒன்றோ இரண்டோ தேர்தல்கள் நடக்கலாம்.
அது எந்த தேர்தலாகவும் இருக்கலாம். மக்கள் மத்தியில் செல்வதாக இருந்தால் மக்களின் நல் அபிப்பிராயங்களை சம்பாதிக்க வேண்டும். மக்களுக்கான நலன் நோன்பு திட்டத்தை முன்னெடுத்தால் மாத்திரம் தான் அதனை பெற்றுக் கொள்ள முடியும்.
முன்வைத்த முக்கிய கோரிக்கை
அதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்துகின்றது. இந்த வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்து இருக்கும் என நான் நினைக்கின்றேன். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி வருமானம் போதியதாக இல்லை என்கின்ற காரணத்தினால் பல வைத்தியர்கள் தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
சிலர் இன்னும் வெளியேறுகின்றனர், இது சுகாதாரத் துறைக்கு ஒரு பேரிடியாக அமைகின்றது; வைத்தியசாலைகளில் வைத்திய தட்டுப்பாடு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
வைத்திய சங்கம் சிலர் எனது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர் . அவர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கை வரியை குறைக்க வேண்டும் அவர்கள் மீது உள்ள வரி வைத்தியர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது.
இன்று ஐந்து வைத்தியர் செய்யும் வேலையை ஒரு வைத்தியர் செய்யும் நிலைமை காணப்படுகின்றது. வைத்தியர்களுக்கு உரிய வரி குறைப்பு என்பது முக்கியமானது.
மற்றும் தாதிமார், சுகாதார துறையோடு சேர்ந்தவர்கள் அத்தியாவசிய சேவை வழங்கும் உத்தியோகத்தர்களுக்கு இந்த வரிச் சுமையை குறைத்தாக வேண்டும். அவர்களுக்கான சில நல்ல திட்டங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் திட்டங்கள் போன்றவற்றில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான அழுத்தங்களை நாமும் கொடுக்கின்றோம் இந்த துறைகள் வீழ்ச்சி அடைந்தால் அது மக்களுக்கு பெரும் பாதிப்பாக அமையும் என தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 19 மணி நேரம் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
