வல்வெட்டித்துறை நகர சபையின் பாதீடு இரண்டாம் முறை தோல்வி
வல்வெட்டித்துறை நகர சபையின் பாதீடு இரண்டாம் முறையும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை நகர சபை பாதீட்டு கூட்டம் இன்றைய தினம் தவிசாளர் என். செல்வேந்திரா தலைமையில் நடைபெற்றிருந்தது.
அதன்போது கடந்த 17ஆம் திகதி சபையில் முன்வைக்கப்பட்ட பாதீடு தோற்கடிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் திருத்தங்களுடன் சபையில் முன்வைக்கப்பட்ட போதும் அதுவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் தவிசாளார் கே.கருணாந்தராசா (வயது 76) கோவிட் தொற்றுக்கு உள்ளாகி கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
அதனை அடுத்து புதிய தவிசாளராக என்.செல்வேந்திரா கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
இந்நிலையில் அவரால் முன் வைக்கப்பட்ட இரு பாதீடும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
இஸ்ரேல் ஏடன் வளைகுடாவில் திறந்துள்ள மூலோபாயம் முன்னரங்கு 18 மணி நேரம் முன்
Viral Video: வானில் மீனுடன் பறந்த கழுகுக்கு நேர்ந்த துயரம்... பெலிகான் பறவையின் மோசமான செயல் Manithan