அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 2025 பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
மாத்தறை, தங்காலையில், நேற்று (19.10.2024) இடம்பெற்ற பிரசார நிகழ்வில் அவர் இதனை அறிவித்துள்ளார்.
அரச துறையினரின் சம்பளத்தை அதிகரிப்பது, பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்குவது மற்றும் பின்தங்கிய மற்றும விசேட தேவைக்கொண்ட சமூகங்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பது குறித்தும் இந்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவு கவனம் செலுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் வருடம்
இவ்வாறான ஓர் பின்னணியில் வரவு செலவுத் திட்டத்தை விரைவாக சமர்ப்பிப்பது பொருத்தமானதல்ல என முன்னதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதனால் எதிர்வரும் வருடம் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |