புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் பாதீடு தொடர்பான அமர்வு: ஒரு உறுப்பினர் வெளிநடப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான அமர்வில் சபை உறுப்பினர் ச.சத்தியசுதர்சன் வெளிநடப்பு செய்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான அமர்வு தவிசாளர் வேலாயுதம் கரிகாலன் தலைமையில் இன்று (13.11.2025) இடம்பெற்றுள்ளது.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இடம்பெற்று இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆளுகையில் உள்ள இந்த சபையின் முதலாவது பாதீடாக இது அமைந்திருந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வருமானம் கூடிய சபைகளில் ஒன்றாக காணப்படுகின்ற இந்த சபையின் பாதீடு இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஏகமனதான தீர்மானம்
இந்நிலையில், உறுப்பினர் ச.சத்தியசுதர்சனால் ஏற்கனவே சின்னச்சாளம்பன் பகுதியில் மயானத்துக்கு செல்லும் பாதையில் பாலம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற பிரேரணை அனைத்து உறுப்பினர்களினதும் ஏகமனதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

இதற்கு வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கான நிதி ஏன் ஒதுக்கப்படவில்லை என வினா எழுப்பப்பட்டதை தொடர்ந்து, சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
இதனையடுத்து, உறுப்பினர் ச.சத்தியசுதர்சன் சபையில் இருந்து வெளியேறிச் சென்றார்.

இதனைத் தொடர்ந்து, ஏனைய உறுப்பினர்களால் சபையில் பாதீடு ஏகமனதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri