2027 - வரவு செலவுத் திட்டம்! போர் வீரர்களின் பெற்றோருக்கு அரசின் புதிய அறிவிப்பு..
மாவட்ட அபிவிருத்தித் திட்டம் மற்றும் பரவலாக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்காக 50 பில்லியன் ரூபாய் ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது. இதில், மாவட்ட மட்டத்தில் அடையாளம் காணப்படும் விசேட அபிவிருத்தித் திட்டங்களுக்காக 47.75 பில்லியன் ரூபாய் பயன்படுத்தப்படவுள்ளது. மீதமுள்ள 2.25 பில்லியன் ரூபாய் பரவலாக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்காக ஒதுக்கப்படவுள்ளது. இதன்படி, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தலா 10 மில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது. |
| 2029ஆம் ஆண்டுக்குள் கழிவுகளைச் சேகரிக்கும் வீதத்தை தற்போதைய 32 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக அதிகரிப்பதற்காக, “Clean Sri Lanka” திட்டத்தின் கீழ் 5 பில்லியன் ரூபாய் ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் தெரிவுசெய்யப்பட்ட 100 உள்ளூராட்சி நிறுவனங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. |
| ஊடகவியலாளர்களின் திறன்களை வலுப்படுத்தவும், அவர்களின் தொழில்முறை வளர்ச்சியை மேம்படுத்தவும், உயர்கல்வி உதவித்தொகைகள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவுக்காக 100 மில்லியன் ரூபாயை ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்தார். |
| புனிதத் தலங்கள், வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியங்களை, 3D லேசர் ஸ்கேனிங் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் மயமாக்கவும் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். |
| 2009-ஆம் ஆண்டுக்கு முன்னதாக ஆயுதப்படைகளில் இணைந்த போர் வீரர்களின் பெற்றோருக்கு வழங்கப்படும் மாதாந்த 750 ரூபாய் கொடுப்பனவை, 2027 ஜூலை முதல் அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. |
| பாதுகாப்புப் படைகளின் ஆராய்ச்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், பாதுகாப்பு அமைச்சின் கீழ் 'பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்' (Defence Development Research Centre) ஒன்றை நிறுவுவதற்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. |
| கொழும்பு சிறைச்சாலை வளாகத்தில் (வெலிக்கடை சிறைச்சாலை, மேகசின் சிறைச்சாலை மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை உள்ளிட்டவை) நிலவும் கடும் நெரிசலைக் கருத்தில் கொண்டு, அந்தச் சிறைச்சாலைகளை மில்லேவப் பகுதிக்கு இடமாற்றம் செய்யும் பணிகளைத் தொடங்குவதற்காக 300 மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். |
2027 ஜூன் முதல் பொலிஸ் அதிகாரிகளுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய, காலநிலைக்கு ஏற்ற புதிய சீருடையை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸாரின் செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காகவும், தேசிய பொலிஸ் கல்வி நிறுவனத்தை முழுமையாக நவீனமயப்படுத்துவதற்காகவும் 9.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் பல்வேறு பிரிவுகளையும் ஒரே கட்டடத்தில் இயங்கச் செய்வதற்காகப் புதிய நிர்வாகக் கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் திட்டங்களைத் தயாரிப்பதற்காக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளது. இணையக் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளை வலுப்படுத்தும் நோக்கில், 15 மாடிகளைக் கொண்ட நவீன குற்றப் புலனாய்வுத் திணைக்களக் கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் திட்டமிடல் பணிகளுக்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. |
பாக்ஸ் ஆபிஸ்: 6 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே சூர்யாவின் சீன் படம் எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam